வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஜி20 நாடுகளில் சிறந்ததாக இந்தியா விளங்குகிறது: திரு பியூஷ் கோயல்
Posted On:
02 SEP 2025 3:16PM by PIB Chennai
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஜி20 நாடுகளில் சிறந்ததாக இந்தியா விளங்குகிறது என மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் 20-வது உலகளாவிய நிலையான வளர்ச்சி குறித்த உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். சிஓபி-21 வெற்றி பெற பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கியப் பங்கு வகித்ததாக அவர் தெரிவித்தார்.
2014-க்கு பின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை 5 மடங்கு அதிகரித்துள்ள இந்தியா, நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது என்று திரு கோயல் கூறினார். இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளைப் பாராட்டிய அமைச்சர், குறைகளற்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருள் உற்பத்தி என்ற பிரதமரின் மந்திரத்தை தொழில்துறையினர் ஏற்று செயல்படுத்த வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக அதிகரித்திருப்பதற்கு இளைஞர்கள், பெண்கள், புத்தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், விவசாயிகள், சிறிய அளவிலான கடைக்காரர்கள் உட்பட அனைவரின் கூட்டான பங்களிப்புக்கு திரு பியூஷ் கோயல் பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163029
-----
SS/SMB/KPG/DL
(Release ID: 2163168)
Visitor Counter : 5