நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான கணக்கு தொகுப்பு அமைப்பின் 4-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது

Posted On: 02 SEP 2025 9:14AM by PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான கணக்கு தொகுப்பு அமைப்பு 2021 செப்டம்பர் 2 அன்று தொடங்கப்பட்டது. நிதிசார்ந்த தரவுகளை பாதுகாப்பாகவும், ஒத்திசைவு அடிப்படையிலும் பகிர்ந்து கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

2023-ல் இந்தியா ஜி20 தலைமைத்துவத்தை பெற்றிருந்தபோது ஒரு அடிப்படை டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பாக கணக்கு தொகுப்பு அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. இது ஆதார், யுபிஐ ஆகியவற்றின் மூலம் தரவு பகிர்வுக்கு பயனுள்ளதாக அமைந்தது. கணக்கு தொகுப்பு அமைப்பின் பங்களிப்பும் தாக்கமும் ஜி20 ஆவணங்களில் அங்கீகாரம் பெற்றது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த இந்தியாவின் ஜி20 பணிக்குழு அறிக்கையில் (ஜூலை 2024) இதன் முக்கியத்துவம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த அமைப்பில் 112 நிதி நிறுவனங்கள் நிதி சார்ந்த தகவல் வழங்குவோராகவும், நிதிசார்ந்த தகவல் பயன்பாட்டாளராகவும், நேரடி தொடர்பில் உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் 2.2 பில்லியன் நிதிசார்ந்த கணக்குகள் பாதுகாப்பாகவும் ஒத்திசைவு அடிப்படையிலும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், 112.34 மில்லியன் பயனர்கள் தங்களின் கணக்குகளை இந்த அமைப்புடன் இணைத்துள்ளனர்.

வழக்கமான கடன் அணுகலில் புதிய நிறுவனங்களுக்கு குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனிநபர் கடனுக்கு இந்த அமைப்பு வகை செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு இது அர்த்தமுள்ள பங்களிப்பை செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162953

-----

SS/SMB/KPG/KR


(Release ID: 2163012) Visitor Counter : 11