மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கல்வி மூலம் நாட்டை கட்டமைப்பதில் என்சிஇஆர்டி பெரும் பங்களித்துள்ளது- மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 01 SEP 2025 5:32PM by PIB Chennai

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமத்தின் (என்சிஇஆர்டி) 65-வது ஆண்டு நிறுவன நாள் விழாவில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். அப்போது ஒடிசாவின் சிறந்த 100 பிரபலங்களின் வாழ்க்கை முறை மற்றும் பங்களிப்பு குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், இந்திய கல்வி முறையின் தனித்துவமிக்க நிறுவனமாக என்சிஇஆர்டி திகழ்கிறது என்று கூறினார். நாட்டின் கல்வி சூழலின் தூணாக இந்நிறுவனம் உள்ளது என்று தெரிவித்த அவர், அர்ப்பணிப்புடன் பல தலைமுறை மாணவர்களின் வாழ்க்கை சூழலை வடிவமைத்துள்ளதாக குறிப்பிட்டார். இந்நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் கல்வி மூலம் நாட்டைக் கட்டமைப்பதில் பெரும் பங்களித்துள்ளதாக அவர் கூறினார்.

சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்தும் புதிய பணிகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் மாற்றத்திற்கான தலைமைத்துவமாக என்சிஇஆர்டி தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162749

***

SS/IR/KPG/KR/DL


(Release ID: 2162843) Visitor Counter : 5