வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையேயான இரட்டை ரயில் பாதைத் திட்டம் குறித்து புதுதில்லியில் விவாதிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2025 5:20PM by PIB Chennai

கர்நாடகா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில்  மேற்கொள்ளப்படும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா தலைமையிலான  உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள், திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் ரூ.3,658 கோடி மதிப்பிலான 5 திட்டங்களில் உள்ள 5 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கேரளாவில், ரூ.5,002 கோடி மதிப்பிலான 2 திட்டங்களில் உள்ள இரண்டு விவகாரங்கள் தெலங்கானாவில் ரூ.1934 கோடி மதிப்பிலான 3 திட்டங்களில் உள்ள 6 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கேரளா – தமிழ்நாடு மாநிலங்களில் திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதை திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ரூ.3785 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள இரட்டை ரயில் பாதைத் திட்டத்தின் மூலம் போக்குவரத்து பயண நேரம் குறையும். ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் பயணிகளுக்கான வசதியும் அதிகரிக்கும். அத்துடன் இப்பிராந்தியத்தில் சரக்கு போக்குவரத்தும் மேம்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162741

----

SS/IR/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2162836) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam