பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நஜப்கரில் உள்ள பானி விமானப்படை தளத்தின் அதிகாரியாக வெங்கடேஷ்வரன் கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்

प्रविष्टि तिथि: 01 SEP 2025 3:56PM by PIB Chennai

ஜப்கரில் உள்ள பானி விமானப்படை தளத்தின் தலைமை அதிகாரியாக வெங்கடேஷ்வரன் கிருஷ்ணகுமார்  இன்று (1 செப்டம்பர் 2025) பொ றுப்பேற்றுக் கொண்டார். அவர் முந்தைய விமானப்படை அதிகாரி திரு அமித் அகர்வாலிடமிருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்திய விமானப்படையில் 1998-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி பணியில் சேர்ந்த அவர், சிறப்பாக செயல்பட்டு அவரது பணிக்காலத்தில் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர்  சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அறிவியல் மற்றும் உத்திசார் படிப்பில் முதுநிலை பட்டமும், புனேயில் உள்ள பாதுகாப்பு நவீன தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை தொழில்நுட்ப பட்டமும் பெற்றுள்ளார்.

அவரது தனித்துவம் மிக்க சேவையை கருத்தில் கொண்டு இந்திய விமானப்படையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தஜிகிஸ்தானில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் குழுவில் (விமானப்படை) பகுதி நேர சேவையாற்றியதுடன் இத்தாலியில் சேவை தொடர்பான படிப்பையும் முடித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162671

***

SS/SV/AG/KR/DL


(रिलीज़ आईडी: 2162819) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी