இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் இயக்கத்தில் மக்கள் பங்கேற்பு அதிகரித்து வருகிறது - மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே
Posted On:
31 AUG 2025 4:44PM by PIB Chennai
இந்திய விளையாட்டு ஆணையத்தின் மும்பை பிராந்திய மையமும், மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் இணைந்து, மும்பையின் போரிவலியில் ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் இயக்கத்தை இன்று (31.08.2025) நடத்தின. இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மிதிவண்டி ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் உடற்பயிற்சி, நிலைத்தன்மை, சமூக உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடும் இந்த இயக்கத்தில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே தலைமை விருந்தினராகவும், பிரபல நடிகரும் உடற்பயிற்சி ஆர்வலருமான திரு ஜாக்கி ஷெராஃப் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான உடல் திறன் இயந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு, நாடு முழுவதும் ஒவ்வொரு வாரமும் வேகம் பெற்று வருவதாகவும் மக்கள் பங்கேற்பு அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். மிதிவண்டி ஓட்டுதல் என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல, எனவும் நகரங்களில் அதிகரித்து வரும் மாசுபாட்டுக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நடைமுறை தீர்வாகும் என்றும் அவர் எடுத்துரைத்தார். மிதிவண்டி ஓட்டுதலை தங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 2162452)
AD/PLM/SG
(Release ID: 2162515)
Visitor Counter : 2