வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையில் அதிக கவனம் செலுத்தி அசுத்தமான இடங்களை விரைந்து சுத்தம் செய்ய மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

Posted On: 30 AUG 2025 1:49PM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 குறித்து உயர்நிலை மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில், மத்திய அமைச்சர்கள்  திரு டோகன் சாஹு  திரு எஸ். கட்டிகிதலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற இந்தியாவில் காணக்கூடிய தூய்மை மற்றும் தூய்மை இலக்கு அலகுகளை அடையாளம் கண்டு மாற்றுவதற்கான இரட்டை முனை அணுகுமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தூய்மைக்கான அழைப்பை வலியுறுத்திய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், "கண்கூசச் செய்யும் பகுதிகளைப் பெருமைக்குரிய பகுதிகளாக மாற்றுவது, பொது இடங்களில்  கண்ணியத்தை மீட்டெடுப்பது, தூய்மை வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அன்றாட வாழ்வில் காணக்கூடியதாகவும், உணரக்கூடியதாகவும், அனுபவிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வது என்பதே தூய்மை இலக்கு அலகுகள் திட்டம் ஆகும்" என்றார்.

திடக்கழிவு மேலாண்மையில் விரைவான தலையீட்டை மாநிலங்கள் வழிநடத்த வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் திரு டோகன் சாஹு தெரிவித்தார். நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 நிறைவடைய இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து முக்கிய இலக்குகளையும் அடைய விரைவாகச் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162194

***

AD/SMB RJ


(Release ID: 2162347) Visitor Counter : 15