திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு
Posted On:
28 AUG 2025 4:53PM by PIB Chennai
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டுக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சண்டிகரில் உள்ள அந்த அமைச்சகத்தின் மாநாட்டு மையத்தின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமரின் திறன் மேம்பாடு, மறுதிறன் மற்றும் உயர்திறன் குறித்த தாரக மந்திரத்தின் அடிப்படையில், அத்துறைக்கான இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் கல்வி அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், வடமாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் பீகார், சண்டிகார், தில்லி, ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்ராகண்ட் போன்ற மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உலகின் திறன் மேம்பாட்டு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மாநிலமும் வலுவான தனித்துவ சிறப்புக் கொண்டது என்றும் வள ஆதாரங்களை ஒருங்கிணைப்பது, உத்திசார் கொள்கைகளை வகுப்பது, தொழில் நிறுவனங்களை கூட்டாளிகளாக பயன்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கை மூலம் இதனை சாதிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். இளையோரின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் அவர்களை தயார்படுத்துவதிலும் கண்ணியமிக்க தொழிலாளர் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும், ஐடிஐ நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவும், வெளிப்படையானதாகவும், எளிதில் அணுகக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொழில் பழகுநரின் வசதிக்காக திருத்தியமைக்கப்பட்ட தொழில் பழகுநர் இணையதளம் மற்றும் புதிய ஐடிஐ படிப்புக்கான திட்டங்கள் தொகுதி அடிப்படையிலான வரைபடம், ஐந்தாண்டுத் திட்டம் போன்றவை நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். திறன் மேம்பாட்டை வளர்ப்பது மட்டுமே அரசின் பொறுப்பு அல்ல என்றும் மாணவர்கள் அதனை வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்றும் இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161553
***
AD/SV/KPG/DL
(Release ID: 2161645)
Visitor Counter : 10