சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
வெளிப்படையான திறன் வாய்ந்த உலகத்தரத்திலான நடுவர்மன்ற சூழல் அமைப்பை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்
Posted On:
28 AUG 2025 4:52PM by PIB Chennai
இந்திய சர்வதேச நடுவர் மையம், இந்தியா தொடர்பான தகராறுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் முறை என்ற கருபொருளில் சிறப்புக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூரில் இன்று (28.08.2025) நடைபெற்ற வாராந்தர மாநாட்டில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வருங்காலத்தில் சர்வதேச அளவிலான விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியா – சிங்கப்பூர் நாடுகளிடையே உயர் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால், இந்தியாவின் நடுவர் முறையிலான நடவடிக்கைகள் மிகவும் வலிமையானது என்றும் இந்திய மத்தியஸ்தம் 1940 மற்றும் சமரச்சட்டம் 1996-ன்படி மத்தியஸ்த நடவடிக்கைகள் பாரம்பரியமாக சமூகத்தில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதனைக் கருத்தில் கொண்டு வெளிப்படையான, திறன் வாய்ந்த, உலகத்தரத்திலான மத்தியஸ்த அமைப்பு முறைகளை உருவாக்கும் நோக்கில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். இந்தப் பயணத்தில் சிங்கப்பூர், இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது என்று அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் வரவேற்புரையாற்றிய டிரியூ & நேப்பியர் நிறுவனத்தின் தலைவர் திரு ஜிம்மி இன், ஏசியா மற்றும் அதனை ஒட்டிய நாடுகளில் இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும் தொடர்ந்து அதன் ஆதிக்கம் பரவியுள்ளது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள சிங்கப்பூர் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 2020-24-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்தம் மையம், ஆசியாவின் முன்னணி நடுவர் மையமாக உருவெடுத்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் சட்ட நடைமுறைகள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161550
***
AD/SV/KPG/DL
(Release ID: 2161636)
Visitor Counter : 10