விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் ஆகஸ்ட் 29 அன்று கர்நாடகா செல்கிறார்
Posted On:
28 AUG 2025 4:04PM by PIB Chennai
மத்திய வேளாண்துறை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் ஆகஸ்ட் 29 அன்று ஒரு நாள் பயணமாக கர்நாடகா செல்லவிருக்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
மைசூருவில் உள்ள சுட்டூர் மடத்தில் டாக்டர் சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமிகளின் 110-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை பங்கேற்கும் அமைச்சர் மரக்கன்றுகள் நடுவதோடு பக்தர்களுடன் கலந்துரையாடுவார். பின்னர் பெங்களூருவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்று தேசிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை பார்வையிடுவார். பூச்சித் தடுப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியையும் அவர் பார்வையிடுவார்.
பிற்பகலில் தேசிய கால்நடை கொள்ளை நோய் மற்றும் நோய்த் தகவல் நிறுவனத்தை பார்வையிடும் அமைச்சர் அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்வதோடு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், புத்தொழில் நிறுவன உரிமையாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோருடன் கலந்துரையாடுவார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161526
***
(Release ID: 2161526 )
AD/SMB/SG/KR/DL
(Release ID: 2161635)
Visitor Counter : 11