கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக வல்லரசுகள் இந்தியாவுடன் கடல்சார் கூட்டாண்மைகளை நாடுகின்றன; திரு சர்பானந்த சோனோவாலுடன் முதலீடு மற்றும் நீலப் பொருளாதாரம் குறித்து தூதர்கள் கலந்துரையாடினர்.

Posted On: 27 AUG 2025 9:27PM by PIB Chennai

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், மும்பையில் அக்டோபர் 27–31 வரை திட்டமிடப்பட்டுள்ள 2025 இந்திய கடல்சார் வாரத்திற்கு  முன்னதாக ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க 28 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், மூத்த அதிகாரிகள், தொழில் தலைவர்கள் மற்றும் பலதரப்பு பிரதிநிதிகளுடன் கூடிய தூதர்களின் வட்டமேசை சந்திப்பை  தில்லியில் நடத்தியது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உலகளாவிய கடல்சார் வர்த்தகம், நிலையான கப்பல் போக்குவரத்து மற்றும் நீலப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். அரசின் 1 ட்ரில்லியன் டாலர் கடல்சார் முதலீட்டுத் திட்டத்தின் செயல்திட்டத்தை எடுத்துரைத்து, முதலீடு மற்றும் புதுமைக்கான மையமாக இந்தியாவை உலகளாவிய கூட்டாளிகள் பார்க்க வேண்டும் என்று திரு சோனோவால் வலியுறுத்தினார்.

“பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தியாவின் கடல்சார் பயணம் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைகிறது. கடல்சார் இந்தியா தொலைநோக்குப் பார்வை 2030 மற்றும் கடல்சார் அமிர்த கால தொலைநோக்குப் பார்வை 2047 போன்ற மாற்றத்தக்க முயற்சிகளுடன், நமது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட சூழலியல் மிகவும் மீள்தன்மை கொண்டதாகவும், நிலையானதாகவும், எதிர்காலத்திற்குத் தயாராகவும் மாறி வருகிறது,” என்று மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்தியாவின் கடல்சார் துறையில் உள்ள வாய்ப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையின் கீழ், நமது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட சூழலியலை மீள்தன்மை கொண்ட, நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள ஒன்றாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் இது சர்வதேச ஒத்துழைப்புக்கான பரந்த வழிகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கடல்சார் முதலீட்டு செயல்திட்டத்திற்கு வித்திடுகின்றன, துறைமுகங்கள் மற்றும் சரக்கு முனைய செயல்பாடுகள், பல மாதிரி முனையங்கள், கடல்சார் சேவைகள், கப்பல் கட்டுதல், கப்பல் மறுசுழற்சி மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு, பசுமை ஹைட்ரஜன் மையங்கள் மற்றும் நிலையான கப்பல் தீர்வுகளை வளர்ப்பதில் கூட்டு முயற்சிகளுக்கு வலுவான ஆற்றல் அளிக்கின்றன" என்று மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2161381   

***

(Release ID: 2161381)

AD/BR/KR

 


(Release ID: 2161469) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi , Assamese