தேர்தல் ஆணையம்
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன: தேர்தல் ஆணையம்
Posted On:
27 AUG 2025 5:36PM by PIB Chennai
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோரல் அல்லது ஆட்சேபம் தெரிவிக்க இன்னும் 5 நாட்களே உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 ஆகஸ்ட் 27 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டது. தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் ஆகஸ்ட் 27 காலை 10.00 மணி நிலவரப்படி இவர்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை) மூலமாக மட்டுமே 53 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் வரப்பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
நேரடியாக 1,78,948 உரிமை கோரல் அல்லது ஆட்சேபங்கள் பெறப்பட்டன. இவற்றில் 20,702 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன. 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 6,35,124 படிவங்கள் கிடைக்கப் பெற்றதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் 27,825 பைசல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161260
*****
(Release ID: 2161260)
AD/SMB/DL
(Release ID: 2161311)