எஃகுத்துறை அமைச்சகம்
ஐஎன்எஸ் உதய்கிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரிக்கு முக்கியமான உயர் தர எஃகு வழங்குவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் துறையுடன் செயில் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது
Posted On:
26 AUG 2025 6:37PM by PIB Chennai
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை எஃகு உற்பத்தியாளரும், இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா நிறுவனமுமான இந்திய எஃகு ஆணையம் (செயில்), இந்திய க் கடற்படையின் மேம்பட்ட முன்னணி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதய்கிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரிக்கு சுமார் 8,000 டன் முக்கியமான உயர் தர எஃகு வழங்குவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புத் துறையுடன் தனது முக்கியமான கூட்டாண்மையைத் தொடர்கிறது. பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்த இரண்டு போர்க்கப்பல்களும் 2025, ஆகஸ்ட் 26 அன்று விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டன.
இந்தியக் கடற்படைக்கு இந்த இரண்டு மேம்பட்ட போர்க்கப்பல்களை உருவாக்குவதில் செயில் முக்கிய பங்கு வகித்தது. மசகான்கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, செயில் அதன் பொகாரோ, பிலாய் மற்றும் ரூர்கேலா எஃகு ஆலைகளிலிருந்து முக்கியமான உயர் தர தகடுகளை வழங்கியது. இந்திய கடற்படைக்கு முக்கியமான எஃகை உருவாக்கி வழங்குவதன் மூலம், செயில் இறக்குமதி மாற்று மற்றும் பாதுகாப்பு தன்னிறைவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. 'தற்சார்பு இந்தியா' மற்றும் 'இந்தியாவில் உற்பத்தி செய்தல்' முயற்சிகளை நேரடியாக ஆதரித்து, பாதுகாப்புத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகு மீது இந்தியா சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.
ஐஎன்எஸ் உதய்கிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி கப்பல்களை இயக்குவது, அடிப்படை எஃகு முதல் சிக்கலான வடிவமைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுவினர் வரை முழுமையாக உள்நாட்டுப் பாதுகாப்பு சூழலியலின் வலிமையையும் ஆழத்தையும் சக்திவாய்ந்த முறையில் நிரூபிக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் அஜய், ஐஎன்எஸ் நிஸ்டார், ஐஎன்எஸ் அர்னாலா, ஐஎன்எஸ் விந்தியகிரி, ஐஎன்எஸ் சூரத் போன்ற புகழ்பெற்ற கப்பல்களுக்கு முக்கியமான உயர் தர எஃகு வழங்குவதில் பெருமைமிக்க வரலாற்றுடன் இந்தியப் பாதுகாப்புத் துறையுடனான செயிலின் நீடித்த கூட்டாண்மை நன்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நாட்டின் தற்போதைய கடற்படை நவீனமயமாக்கலில் நம்பகமான தேசிய உற்பத்தியாளராகவும் முக்கிய ஒத்துழைப்பாளராகவும் செயிலின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160968
***
(Release ID: 2160968)
AD/SMB/RB/DL
(Release ID: 2161249)
Visitor Counter : 17