புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
'கடல்சார் கணக்குகளை மேம்படுத்துவது குறித்து கடலோர மாநிலங்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு - கொச்சியில் ஆகஸ்ட் 29-ல் நடைபெறவுள்ளது
Posted On:
27 AUG 2025 12:50PM by PIB Chennai
கேரள மாநிலத்தின் பொருளாதார, புள்ளியியல் இயக்குநரகத்துடன் இணைந்து, மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2025 ஆகஸ்ட் 29 அன்று கேரளாவின் கொச்சியில் "கடல்சார் கணக்குகளை மேம்படுத்துவதில் கடலோர மாநிலங்களுக்குத் திறன் மேம்பாடு" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கை நடத்தவுள்ளது. கடலோர மாநிலங்கள் தங்கள் பெருங்கடல் கணக்குகளை உருவாக்க ஊக்குவிப்பது இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கமாகும்.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் "இந்தியாவில் பெருங்கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்புக் கணக்குகள்" என்ற நிபுணர் குழு அறிக்கையை 2025 ஜனவரி 22 அன்று வெளியிட்டுள்ளது. பல்வேறு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான அளவு, நிலை, சேவைகள், சொத்து கணக்குகளின் கீழ் சுற்றுச்சூழல், பொருளாதார தரவுகளை ஒருங்கிணைப்பதற்கான வழியை இது வழங்குகிறது. இந்தியாவில் நிலையான கடல் மேலாண்மையுடன் வளர்ச்சியை சமநிலைப்படுத்தி, முடிவெடுப்பதை இது எளிதாக்குகிறது.
இந்தப் பயிலரங்கில், புள்ளியியல் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம், மாநில மீன்வளத் துறைகள், கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில சுற்றுலாத் துறைகள், இந்தியாவில் பெருங்கடல் சுற்றுச்சூழல் கணக்குகள் குறித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்கள், கடல் சார் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்பார்கள்.
***
(Release ID: 2161120)
AD/SMB/PLM/DL
(Release ID: 2161167)