பாதுகாப்பு அமைச்சகம்
நவீன போர்க்கப்பல்களான உதயகிரி மற்றும் ஹிம்கிரி கப்பல்களை இந்தியக் கடற்படையில் இணைப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
25 AUG 2025 11:00AM by PIB Chennai
கூடிய பன்முகத்தன்மை கொண்ட நவீன தொழில்நுட்பங்களுடன் போர்க்கப்பல்களான உதயகிரி மற்றும் ஹிம்கிரி கப்பல்களை இந்திய கடற்படையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் நாளை (26.08.2025) இதற்கான நிகழ்ச்சி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ளது. இரண்டு வெவ்வேறு சுப்பல் கட்டுமானத்தளங்களில் கட்டப்பட்ட இந்த இரண்டு போர்க்கப்பல்கள் ஒரே சமயத்தில் நாட்டின் கிழக்குக் கடற்படை பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளது.
உதயகிரி மற்றும் ஹிம்கிரி என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு போர்க்கப்பல்களும் ஷிவாலிக் வகையைச் சார்ந்ததாகும் இந்தப் போர்க்கப்பல் வடிவமைப்பு வலிமை, நவீன ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட கருவிகளுடன் குறிப்பிடத்தக்க பகுதிகளில் கடல் வகையில் பாதுகாப்பை தொலையுணர்வு மேம்படுத்தப்பட்டுள்ளது. வலுப்படுத்துவதற்கு இந்த இரண்டு போர்க்கப்பல்கள் திறன் மிக்கவையாகும்.
இதன் மூலம் போர்க்கப்பல்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் நாடு தன்னிறைவு பெறவேண்டும் என்ற தீர்மானத்துடன் கடற்படையின் போர்த்திறன் வலுப்படுத்தப்படுகிறது இந்த இரண்டு போர்க்கப்பல்களும் இந்திப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160573
***
AD/SV/KPG/DL
(Release ID: 2160707)