பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதகாப்புக் குறித்து இளம் தலைவர்கள் பங்கேற்கும் குழு விவாதம்

Posted On: 25 AUG 2025 4:17PM by PIB Chennai

இந்திய ஆழ்கடல் கடற்படை ஒருங்கிணைப்பு அமைப்பின் கீழ், வளர்ந்து வரும் தலைவர்களின் குழு விவாதம் குறித்த நிகழ்ச்சியை இந்திய கடற்படை இம்மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கொச்சியில் உள்ள தென்மண்டல கடற்படை தளத்தில் நடத்துகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. கடற்படையில் வளர்ந்து வரும் இளம் அதிகாரிகளிடையே சிந்தனையை விரிவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளுடன் குழு விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிராந்திய கடல்சார் விவகாரங்கள் உட்பட கடற்பகுதியில் தங்களது கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள இந்த நிகழ்ச்சி உதவி செய்கிறது.

கடல்சார் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பரஸ்பரம் நட்பு நாடுகளிடையே எதிர்கால ஒத்துழைப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு, பயிற்சி உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது. தென்பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திரு வி ஸ்ரீனிவாஸ்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160565

 

***

AD/SV/KPG/DL


(Release ID: 2160704)
Read this release in: English , Urdu , Hindi