தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சியின் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது: தேர்தல் ஆணையம்
Posted On:
25 AUG 2025 4:31PM by PIB Chennai
தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் பல்வேறு சுற்றுகள் மூலம் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தியுள்ளது 2025 மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் ஏற்பாடு செய்த தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டின் போது இக்கூட்டங்கள் குறித்து திட்டமிடப்பட்டது அதன்படி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மூலம் 40 கூட்டங்களும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மூலம் 800 கூட்டங்களும் தேர்தல் பதிவு அதிகாரிகள் மூலம் 3879 கூட்டங்கள் என மொத்தம் 4719 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 28,000-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதன் பிறகு 5 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 2025 மே மாதத்தில் 5 தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் விவாதித்துள்ளது. இக்கூட்டத்தின் மூலம் கட்சியின் தலைவர்கள் தங்களது கருத்துக்களையும், பிரச்சனைகளையும் நேரடியாக ஆணையத்திடம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதே போல் 2025 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் விவாதித்துள்ளது. எஞ்சிய அரசியல் கட்சிகளுடனான கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160577
***
(Release ID: 2160577)
AD/IR/SG/RJ
(Release ID: 2160663)