இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை கொண்டாடப்படவுள்ளது

Posted On: 25 AUG 2025 5:01PM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினம் 2025-ஐ மக்கள் இயக்கமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதற்கான ஏற்பாடுகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொடங்கியுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்ரகாண்ட், பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும் புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேச அரசுகளும், தில்லி தேசிய தலைநகர் பிராந்திய அரசும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்பாடுகள் தொடர்பான அறிவுரைகளை முன்கூட்டியே அளித்துள்ளன.

பிரபல ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய விளையாட்டு தினம் 2025 ஃபிட் இந்தியா இயக்கம் மூலம் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை கொண்டாடப்படவுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மா, பாராம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற சுமித் அன்டில், காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரேயாஷி சிங், ஒலிம்பிக் வால்வீச்சு வீராங்கனை பவானி தேவி, படகு செலுத்துதல் வீரர் விஷ்ணு சரவணன் ஆகியோர் தங்களது சொந்த ஊர்களில் அல்லது பயிற்சி இடங்களில் ஆகஸ்ட் 29 அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160602

***

(Release ID: 2160602)

AD/IR/SG/RJ


(Release ID: 2160660)