புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2025 – 2026-ம் நிதி ஆண்டுக்கான இலக்குகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இடையே கையெழுத்தானது
Posted On:
25 AUG 2025 2:40PM by PIB Chennai
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் 2025 – 2026-ம் நிதி ஆண்டுக்கான இலக்குகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.
புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு பிரதிப் குமார் தாஸ் ஆகியோர் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2025 – 2026-ம் நிதியாண்டில் ரூபாய் 8,200 கோடி அளவிற்கு வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2024-25–ம் நிதியாண்டில் ரூபாய் 5,957 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூபாய் 6,743.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160514
***
AD/IR/SG/RJ
(Release ID: 2160560)