மக்களவை செயலகம்
2025 அக்டோபர் 5 முதல் 12 வரை பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் 68வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு மக்களவை சபாநாயகர் தலைமை தாங்குகிறார்
Posted On:
24 AUG 2025 8:08PM by PIB Chennai
பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் 2025 அக்டோபர் 5 முதல் 12, வரை நடைபெறும் 68வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை தாங்குவார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்திற்கு திரு பிர்லா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளுக்கு மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விளக்கினர்.
மக்களவைத் தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் ஆகியோருடன், இந்தியா முழுவதும் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்றங்களின் தலைமை அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள், மாநாட்டில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்தியப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
'காமன்வெல்த்: ஒரு உலகளாவிய கூட்டாளி' என்ற கருப்பொருளில் 68வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டின் பொதுச் சபையில் திரு பிர்லா உரையாற்றுவார்.
கூடுதலாக, இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் ஏழு கருப்பொருட்கள் பற்றிய பயிலரங்குகளில் பங்கேற்பார்கள். மேலும் "பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வது: நவீன சவால்களை சமாளிக்க இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்-கும்பல் வன்முறை முதல் சைபர்-கொடுமைப்படுத்தல் வரை" என்ற தலைப்பில் இளைஞர் வட்டமேசை மாநாடும் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160382
***
AD/RB/RJ
(Release ID: 2160551)