பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரபயாவில் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது, இந்திய கடற்படைக் கப்பல் காட்மட்

Posted On: 23 AUG 2025 7:29PM by PIB Chennai

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் காட்மட், இந்தோனேசியாவின் சுரபயாவில் மூன்று நாள் துறைமுகப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது, இது இந்திய கடற்படைக்கும் இந்தோனேசிய கடற்படைக்கும் (TNI AL) இடையிலான நட்பு, நம்பிக்கை மற்றும் இயங்குதன்மை ஆகியவற்றின் பிணைப்பை வலுப்படுத்தியது.

இந்தப் பயணத்தின் போது, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்த தொழில்முறை மற்றும் கலாச்சார நிகழ்சிகள் நடத்தப்பட்டன. முக்கிய நடவடிக்கைகளில் தொழில்முறை தொடர்புகள் மற்றும் இரு கடற்படைகளுக்கும் இடையே செயல்பாட்டு இணைப்பை வளர்ப்பது ஆகியவை அடங்கும்.

கப்பலில் ஒருங்கிணைந்த யோகா அமர்வு மற்றும் இந்தோனேசிய கடற்படை பணியாளர்களுடன் நட்புரீதியான கைப்பந்து போட்டியிலும் இந்தியக் குழுவினர் பங்கேற்றனர், இது நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பகிரப்பட்ட உணர்வை வெளிப்படுத்தியது.

சமூக தொடர்புகளின் ஒரு பகுதியாக, இந்தோனேசியாவில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரை கப்பல் வரவேற்றது. அவர்களுக்கு கப்பலைப் பார்வையிடவும், குழுவினருடன் கலந்துரையாடவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. மேலும், கடற்படையின் உயர் அதிகாரிகளுடனான மரியாதைக்குரிய சந்திப்புகள், பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் களத்தை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்தின.

ஐஎன்எஸ் காட்மட்டின் வருகை, இந்தப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் விருப்பமான பாதுகாப்பு கூட்டாளியின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் 'கடல் தாண்டிய கூட்டாண்மை' என்ற பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நீண்டகால கடல்சார் கூட்டாண்மையை வலுப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160195

***

AD/RB /RJ


(Release ID: 2160394)
Read this release in: English , Urdu , Marathi , Hindi