பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி அரசுமுறைப் பயணமாக அல்ஜீரியாவிற்குச் செல்கிறார்
Posted On:
24 AUG 2025 10:14AM by PIB Chennai
ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, 2025 ஆகஸ்ட் 25 முதல் 28 வரை அல்ஜீரியாவிற்கு அரசுமுறைப் விஜயம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர், முப்படைகளின் தளபதி ஆகியோரின் சமீபத்திய அல்ஜீரியப் பயணத்திற்குப் பிறகு ராணுவ தளபதியின் இந்தப் பயணம் நடைபெறுகிறது. இது இந்தியா-அல்ஜீரியா உறவுகளை வலுப்படுத்துவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
இந்தப் பயணம், இந்தியாவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது, பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வது ஆகியவற்றில் இந்தப் கவனம் செலுத்தும்.
இந்தப் பயணத்தின் போது, ஜெனரல் திவிவேதி அல்ஜீரிய மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார். முக்கிய அல்ஜீரிய ராணுவ நிறுவனங்களுக்கும் அவர் சென்று அங்கு தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்.
***
(Release ID: 2160255)
AD/PLM/RJ
(Release ID: 2160324)