சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஒத்துழைப்பு மூலம் சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளை வலுப்படுத்த தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஒன்றிணைகின்றன
Posted On:
23 AUG 2025 10:28AM by PIB Chennai
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் பூட்டான், நேபாளம், இலங்கை, திமோர்-லெஸ்டே, இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் சந்தித்து சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த உயர்நிலை பிராந்திய உரையாடலை நடத்தினர். சுகாதார ஆராய்ச்சி நேரடியாக கொள்கையைத் தெரிவிக்கிறது, பிராந்திய முன்னுரிமைகளை நிவர்த்தி செய்கிறது, எதிர்காலத்திற்கு நிலையான அமைப்புகளை உருவாக்குகிறது என்பதை உறுதி செய்வதற்காக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறித்தது.
மருத்துவ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொண்ட மருந்துத் துறையின் செயலாளர் திரு அமித் அகர்வால், இந்தியா இன்று அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுகாதாரத்திற்கான கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது என்றார். நமது ஆராய்ச்சி தளக் கூட்டாளிகள் இந்தியாவின் திறந்த கண்டுபிடிப்புத் தளங்களுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் நாம் ஒன்றாக புத்தொழில்களை வளர்க்கவும், மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும், பொருளாதார வளர்ச்சி, பொது நன்மை ஆகிய இரண்டிற்கும் சேவை செய்யும் மலிவு விலை மருந்துகளை வழங்கவும் முடியும் என்று அவர் கூறினார்.
அறிவுப் பகிர்விலிருந்து கூட்டு நடவடிக்கைக்கு முன்னேறும் கூட்டு உறுதிப்பாட்டுடன் இந்த சந்திப்பு நிறைவடைந்தது. ஒரே சுகாதாரம், தொற்றுநோய்க்கான தயார்நிலை, தொற்று நோய்கள், பரவும் நோய்கள், தொற்றாத நோய்கள், பேறுகால சுகாதாரம், மருத்துவ கண்டுபிடிப்புகள் போன்ற முக்கியத் துறைகளில் வழிநடத்தும் வாய்ப்புகளை ஆராய்ந்து, பிராந்தியம் முழுவதும் சுகாதார ஆராய்ச்சி, பிராந்திய தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு நேரடியாகத் தீர்வு காண்பதை ஒவ்வொரு நாடும் உறுதி செய்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160028
*****
AD/SMB/SG
(Release ID: 2160168)