புவி அறிவியல் அமைச்சகம்
கடல்வாழ் உயிரினங்கள், கனிமவளங்கள் தொடர்பான ஆழ்கடல் ஆய்வுப் பணிகள்
Posted On:
20 AUG 2025 4:41PM by PIB Chennai
ஆழ்கடல் ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னையில் உள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகம், கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு 3 நபர்களைக் கொண்டு செல்லும் வகையில், நீர்மூழ்கி அமைப்பை வடிவமைத்துள்ளது. தமிழ்நாடு அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டுமானத் தளத்தில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்ட இந்த அமைப்பின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
மத்சயா 6,000 என்று பெயரிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய வகை நீர்மூழ்கி, அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு கருவிகளுடன் ஆழ்கடல் ஆய்வுப் பணிகள், அறிவியல் ரீதியான துரப்பனப் பணிகள்
ஆழ்கடல் பகுதியில் வசிக்கும் பல்லுயிரிகள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள், கனிம வளங்கள் ஆகியவை தொடர்பான ஆய்வுகளுக்கும் உதவிடும்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158412
.
***
AD/SV/KPG/DL
(Release ID: 2158676)