பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
கர்நாடகாவில் பழங்குடி அருங்காட்சியகங்களை நிறுவுதல்
Posted On:
20 AUG 2025 1:08PM by PIB Chennai
மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம், 'பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவு' திட்டத்தின் கீழ் கர்நாடகாவின் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 29 பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. டாக்டர் தர்மஸ்தலா வீரேந்திர ஹெக்கடேவின் கேள்விக்கு பதிலளித்த பழங்குடியினர் நலகட்குறை இணையமைச்சர் , இந்தத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்புத் தேவைகள், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பழங்குடி விழாக்களை ஏற்பாடு செய்தல், தனித்துவமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான யாத்திரைகள் மற்றும் பழங்குடியினரின் பரிமாற்ற வருகைகளை ஏற்பாடு செய்தல் ஆகியவை தொடர்பான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் கலாச்சார நடைமுறைகள், மொழிகள் மற்றும் சடங்குகள் பாதுகாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன.
பழங்குடியினர் நல அமைச்சகம், காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடி, தங்கள் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணித்த பழங்குடி மக்களின் வீரமிக்க மற்றும் தேசபக்தி செயல்களை அங்கீகரிக்க, பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியுதவி அளிக்கப்பட்ட 'பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆதரவு' திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அமைச்சகம் மாநிலத்திற்கு மானியங்களை வழங்குகிறது. மாநிலம் நிலத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வேண்டும் மற்றும் ஒரு கட்டுமான மற்றும் மேற்பார்வை நிறுவனம் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தற்போது வரை, 10 மாநிலங்களில் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்களை நிர்மாணிப்பதற்காக 11 திட்டங்களுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார் .
***
AD/SM/DL
(Release ID: 2158660)