புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை தொடர்பான கணிப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு
प्रविष्टि तिथि:
20 AUG 2025 4:41PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வானிலை மற்றும் பருவநிலை குறித்த கணிப்புக்களுக்கான ஆய்வுகளை இந்திய வானிலை மையமும் மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகமும் மேற்கொண்டு வருகின்றன. இதில் புயலின் தீவிரம் குறித்து மதிப்பிடுவதற்கு அதிநவீன வோரக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரமொழி அடிப்படையிலான கருவிகள். கலப்பினக் கருவிகள் மூலம் வானிலை குறித்த கணிப்புகளை துல்லியமாக கணக்கிட முடியும்.
விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு வானிலை குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற பஞ்சாயத்துக்களையும் உள்ளடக்கிய வானிலை குறித்த தகவல்களை அறிவிப்பதற்கு ஏதுவாக கிராமப்புற பஞ்சாயத்து நிலையிலான வானிலை கணிப்புகளை மத்திய பஞ்சாயத்து அமைப்புகளுடன் இணைந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158416
***
AD/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2158544)
आगंतुक पटल : 12