கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு வங்கி நடைமுறையில் சைபர் பாதுகாப்புக்கு, தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது
Posted On:
20 AUG 2025 2:50PM by PIB Chennai
கூட்டுறவு வங்கி நடைமுறைகளில் தரவுப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, வங்கிகளுக்கு இடையேயான செயல்பாடு ஆகியவற்றை விரிவுபடுத்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், டிஜிட்டல் சகாப்தத்திற்கு தயாராக இருப்பதற்காக கூட்டுறவு வங்கிகளை டிஜிட்டல் மயத்தை துரிதப்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றார். இதே போல் ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்க சஹாகர் சாரதி (பகிரப்பட்ட சேவை நிறுவனம்) என்பதை அமைக்க நபார்டு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கித்துறையில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு பிரச்சனைக்கு தீர்வு காண விரிவான சைபர் காப்பீட்டு கொள்கை, ஊரக கூட்டுறவு வங்கிகளிலும், பிராந்திய ஊரக வங்கிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய வங்கிகளின் ஒருங்கிணைப்புச் சூழலில் சைபர் குற்ற அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது வரை நபார்டு வங்கித் திட்டத்தின் கீழ் 231 ஊரக கூட்டுறவு வங்கிகளிலும், 21 பிராந்திய ஊரக வங்கிகளிலும், 2 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளிலும் சைபர் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158334
***
AD/SMB/AG/KR
(Release ID: 2158438)