தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மங்களூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெட்வொர்க் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது

Posted On: 20 AUG 2025 12:44PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), மங்களூர், கர்நாடகா உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான அதன் தனிப்பட்ட தரவு தர முடிவுகளை வெளியிட்டது. இது ஜூலை 2025 மாதத்தில் விரிவான நகரம்/நெடுஞ்சாலை வழித்தடங்களை உள்ளடக்கியது. பெங்களூருவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட தரவுத் தர முடிவுகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய வழித்தடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவேக தாழ்வாரங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ் நேர கைபேசித் தரவுத் தர செயல்திறனைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டன.

 

ஜூலை 07, 2025 முதல் ஜூலை 11, 2025 வரை, ட்ராய் குழுக்கள் 313.2 கிமீ நகர தரவுத் தர பரிசோதனை, 3.4 கிமீ கடலோர தரவுத் தர பரிசோதனை, 10.0 கிமீ நடைப்பயிற்சி தரவுத் தர பரிசோதனை மற்றும் 11 முக்கிய வழித்தடங்களில் விரிவான தரவுத் தர பரிசோதனைகளை மேற்கொண்டன. மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களில் 2G, 3G, 4G மற்றும் 5G ஆகியவை அடங்கும், இது பல கைபேசி திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கிறது. தனிப்பட்ட தரவு தர கண்டுபிடிப்புகள் ஏற்கனவே தொடர்புடைய அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மங்களூரு நகரில், கூலாய், சூரத்கல், கட்டிபல்லா, ஜோகட்டே, காவூர், பாஜ்பே ப்ரோப்பர், கைகம்பா, யமஞ்சூர், தும்பே, கங்கனாடி, உல்லால், கோட்டேகர், முடிப்பு மற்றும் டெரலகட்டே போன்ற அதிக அடர்த்தி கொண்ட சுற்றுப்புறங்கள் மதிப்பீட்டில் அடங்கும்.

நிலையான பயனர் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில், பெங்ரே கடற்கரை, மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், இந்தியானா மருத்துவமனை மற்றும் இதய நிறுவனம், மஹல்தோபாரா ஸ்ரீ மங்களாதேவி கோயில், மங்களூரு பேருந்து நிலையம், மங்களூரு சர்வதேச விமான நிலையம், மங்களூரு பல்கலைக்கழகம், பனம்பூர் கடற்கரை, எஸ் சி எஸ் மருத்துவமனை, செயிண்ட் அலோசியஸ் பல்கலைக்கழகம் மற்றும் மங்களூரு நகர துணைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் ட்ராய் நிகழ் நேர தரவுத் தர நிலைமைகளையும் மதிப்பீடு செய்தது.

மங்களூரு நகரில் ஜூலை 08 மற்றும் 10, 2025 அன்று நடத்தப்பட்ட நடைப்பயிற்சி சோதனைகள், மத்திய சந்தை, கத்ரி பூங்கா, மங்களூரு ரயில் நிலையம், பிரஜா சவுதா, பாடில் மற்றும் தன்னிர்பாவி கடற்கரை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நெரிசலான பாதசாரி சூழல்களில் கைபேசி நெட்வொர்க் தரத்தையைப் பதிவு செய்தன.

சுல்தான் பத்தேரி முதல் தண்ணீர்பாவி வரையிலான கடற்கரை சோதனையும், பெங்கேரி படகுப் பாதை வரையிலான பிஎம்எஸ் படகுப் போக்குவரத்து சேவையும், பாதையில் சேவையின் தரத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நடத்தப்பட்டன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. விரிவான அறிக்கை ட்ராய் வலைத்தளமான www.trai.gov.in-ல் கிடைக்கிறது. மேலும் தகவல்களுக்கு, ட்ராய் ஆலோசகர் (மண்டல அலுவலர், பெங்களூரு) திரு பிரஜேந்திர குமார் அவர்களை adv.bengaluru@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +91-80-22865004 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

***

(Release ID:  2158283  )

SS/SM/KR

 


(Release ID: 2158336)
Read this release in: English , Hindi