ஆயுஷ்
azadi ka amrit mahotsav

குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேத மருத்துவத்தின் முழுமையான அணுகுமுறை குறித்த கருத்தரங்கு

Posted On: 20 AUG 2025 8:00AM by PIB Chennai

ஆயுர்வேத மருத்துவம் மூலம் குழந்தைகளின் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் நலவாழ்வு மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பாக இயங்கி வரும்  ராஷ்டீரிய ஆயுர்வேத வித்யா பீடம் ஏற்பாடு செய்திருந்த இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், (18,19.08.2025) அத்துறையின் நிபுணர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேத மருத்துவத்தின் முழுமையான அணுகுமுறை குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் நிறைவுரையாற்றிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், இது போன்ற கருத்தரங்குகள் மூலம், நாட்டின் குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்பில் ஆயுர்வேத மருத்துவத்தின் பங்களிப்பு வலுபெறும் என்று கூறினார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையில் தடுப்பு, ஊக்குவிப்பு மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். குழந்தைகள் ஆரோக்கியம், இந்தியாவின் ஆரோக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் மருத்துவ முறையிலான புதிய ஆய்வுகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளை உருவாக்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது என்று மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158212

***

AD/SV/KPG/KR


(Release ID: 2158326)