சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை

Posted On: 18 AUG 2025 4:53PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்திற்கான ஐநா சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் தேசிய அளவிலான தகவல்கள் குறித்த அறிக்கைகளும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி  பசுமைக் குடில் வாயுக்களின் இருப்பு தொடர்பாக பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளிடையேயான குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் உட்பட நாடு முழுவதும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கென தேசிய செயல்திட்டத்தையும் அரசு அமல்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்,  சூரிய எரிசக்தி, மேம்பட்ட எரிசக்தித் திறன், தண்ணீர், விவசாயம், இமயமலைப் பகுதிகளில் சூழல் அமைப்பு, நீடித்த வாழ்வியல் முறை, பசுமை இந்தியா, சுகாதாரம், உத்திசார் அறிவுகள் வளர்த்துக் கொள்வது போன்ற குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் தேசிய செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157525

-----

AD/SV/KPG/DL


(Release ID: 2157661) Visitor Counter : 7