ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீரின் தரக் கண்காணிப்பு முறைகள்

Posted On: 18 AUG 2025 2:32PM by PIB Chennai

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இல்லம் தோறும் குடிநீர்  வழங்க குழாய் இணைப்பு ஏற்படுத்தும் திட்டம் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

குடிநீர் விநியோகம் மாநில அரசின் வரம்பிற்குள் வருவதால், குடிநீர் விநியோகத் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், திட்டமிடல், அனுமதி, செயல்பாடு, பராமரிப்பு ஆகிய பணிகளை செயல்படுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. இத்திட்டத்தை  செயல்படுத்த மாநில அரசுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏற்கனவே நடைமுறையில் உள்ள  வழிகாட்டுதல்கள்படி இந்திய தரநிலை அமைவனம், பிஐஎஸ் -10500 என்ற தரநிலையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. பிஐஎஸ், நீரின் தரத்தை உறுதி செய்வதற்கு ஏதுவாக 2 தரநிலைகளை உருவாக்கியுள்ளது. இதன்படி, குடிநீரின் தரத்தை பாக்டீரியா மற்றும் ரசயான மூலக்கூறுகளின்  அளவுகளை ஏற்றுக் கொள்ளப்படும் வரையறை மற்றும் அனுமதிக்கப்படும் வரையறை என நிர்ணயித்துள்ளது.

ஜல் ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆண்டில் 3.23 கோடி (16.7%) கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய்  இணைப்பு  வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை 14.08.2025 அன்று 15.68 கோடிக்கும் அதிகமாக (81%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஜல் ஜீவன் இயக்க தகவல் பலகையில்,  குடிநீரின் தரம் குறித்த சோதனை முடிவுகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு வி சோமன்னா  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157428

***

SS/SV/KPG/KR


(Release ID: 2157519)
Read this release in: English , Urdu , Hindi