ஜல்சக்தி அமைச்சகம்
நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள்
Posted On:
18 AUG 2025 2:29PM by PIB Chennai
பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், 2 மிகப் பெரிய திட்டங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. பாசன வசதியின் பயன்பாடுகளுக்கான திட்டங்களை விரைவுப்படுத்துதல் மற்றும் புவி சார் அடிப்படையிலான பாசன வசதிகளை மேம்படுத்துவது ஆகிய திட்டங்களை நீர்வள ஆதாரத்துறை மற்றும் நதிநீர் மேம்பாடு & கங்கை புனரமைப்புத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிசம்பர் 2021-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் 2025-26-ம் ஆண்டு வரை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனினும், நிலத்தடி நீரை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு 2021-22-ம் ஆண்டு தற்காலிக ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை நீர், பனிப்பாறைகள் உருகுவதன் மூலம், நதிகள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரைப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ்பூஷன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2157427
-----
SS/SV/KPG/KR
(Release ID: 2157514)