மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பசும்பால் மற்றும் இணை – முத்திரை பால் தயாரிப்புகளின் டிஜிட்டல் அறிமுகம் நடைபெற்றது
Posted On:
14 AUG 2025 8:57AM by PIB Chennai
தில்லி பால்வளத் திட்டத்தின் (டிஎம்எஸ்) கீழ் நேற்று புதுதில்லி பூசாவில் உள்ள என்ஏஎஸ்சி வளாகத்தில் புதிய பால் பொருட்களின் அறிமுகம் மற்றும் பூத் ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். பசும்பால் மற்றும் இணை – முத்திரை பால் தயாரிப்புகளின் டிஜிட்டல் அறிமுகம் நடைபெற்றதோடு டிஎம்எஸ் திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 22 புதிய பூத் ஒதுக்கீட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு ஊரகம்-நகரம் பால்வள இணைப்பும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா தன்னுடைய சிறப்புரையில் மதிப்புக்கூட்டல் சங்கிலித் தொடரில் பங்குதாரர்களுக்கான வாய்ப்புகளை உள்ளடக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பால்வளத் துறையின் சூழல்சார் அமைப்பை வலுப்படுத்துகின்ற தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டார். தில்லி பால்வளத் திட்டம் மற்றும் ஹரியானா பால்வள கூட்டமைப்பு ஆகியவை சந்தையில் தங்களது புதிய தயாரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தியதற்காக செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கூடுதல் செயலாளர் திருமிகு வர்ஷா ஜோசி தில்லி தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் டிஎம்எஸ் பிராண்ட் பால் மற்றும் பால்வளப் பொருட்களுக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராம சங்கர் சின்ஹா, துறையின் ஆலோசகர் ஜெகத் ஹஜாரிகா, ஹரியானா பால்வள மேம்பாட்டு கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர் திரு ராம் அவ்தார் கார்க் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2156242)
AD/SS/TS/RJ
(Release ID: 2156376)