பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
பெரு நிறுவனங்களின் தனி அதிகாரம் இல்லாத இயக்குநர்கள் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான 4 மாத கால பயிற்சி
प्रविष्टि तिथि:
13 AUG 2025 4:07PM by PIB Chennai
பெரு நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடாத இயக்குநர்கள் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான 2-ம் கட்ட நான்கு மாதப் பயிற்சியை தேசிய நிதி அறிக்கை ஆணையம் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான கழகம் இணைந்து புதுதில்லியில் ஆகஸ்ட் 12 அன்று தொடங்கியது.
நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை குறித்த முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக தேசிய நிதி அறிக்கை ஆணையம் மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான கழகம் இணைந்து இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜனவரி முதல் மே மாதம் வரை நடைபெற்ற இந்த முதல்கட்டப் பயிற்சியில் 79 பேர் பங்கேற்றனர்.
இந்த நான்கு மாதப் பயிற்சி இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. விருப்பத் தேர்வாக உள்ள முதலாவது தொகுதியில், நிதிசார் தொழில்முறை இல்லாத நபர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கணக்கியல் முறைகள், நிதிசார் அறிக்கைகள் மற்றும் அவற்றில் இடம் பெறும் அடிப்படைக் கூறுகள், நிதிசார் பகுப்பாய்வு முறைகள், அடக்க விலை தொடர்பான பகுப்பாய்வுகள், முதலீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியின் இரண்டாவது தொகுதியில் நிறுவனங்களுக்குள் நடைபெறும் செயல்பாடுகளின் கட்டுப்பாடு சட்ட ரீதியான தணிக்கை தொடர்புடைய நபர்களின் பரிவர்த்தனைகள், மோசடி குறித்த இடர்பாட்டு மேலாண்மை, அறிக்கைகள் தயாரித்தல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156045
***
AD/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2156145)
आगंतुक पटल : 12