சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Posted On:
12 AUG 2025 3:10PM by PIB Chennai
நிரமயா சுகாதார காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் - மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் தேசிய அரிய நோய்களுக்கான கொள்கை, 2021 போன்ற பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்புத் துறை தெரிவித்துள்ளபடி, நிரமயா சுகாதார காப்பீட்டுத் திட்டம், முன் காப்பீட்டு மருத்துவ பரிசோதனை இல்லாமல், ரூ. 1 லட்சம் வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மலிவான பிரீமியத்தில் சுகாதார காப்பீட்டை வழங்குகிறது.
இந்திய மக்கள்தொகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ள 40% மக்களைக் கொண்ட சுமார் 12 கோடி குடும்பங்களுக்கு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார பராமரிப்பு வழங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தகுதியுள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டை பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் - மக்கள் ஆரோக்கிய திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், திட்ட பயனாளிகள் சமூக-பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பில் அடையாளம் காணப்பட்ட ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை உள்ளடக்கியது. கிராமப்புறங்களுக்கான பற்றாக்குறை அளவுகோல்களை உள்ளடக்கியது, அவற்றில் ஒன்று "ஊனமுற்ற உறுப்பினர் மற்றும் உடல் தகுதி இல்லாத வயது வந்தோர் உறுப்பினர்".
நியமிக்கப்பட்ட 14 சிறப்பு மையங்களில் அடையாளம் காணப்பட்ட 63 அரிய நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ. 50 லட்சம் வரை நிதி உதவியை தேசிய அரிய நோய்களுக்கான கொள்கை அடிப்படையில் வழங்குகிறது. இது அவர்களின் சொந்த நிதியிலிருந்து செலவினத்தை கணிசமாகக் குறைக்கிறது.
மேலும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 29.05.2024 தேதியிட்ட சுகாதார காப்பீடு குறித்த முதன்மை சுற்றறிக்கை, அனைத்து வயதினருக்கும், அனைத்து வகையான மருத்துவ நிலைமைகள், முன்பே இருக்கும் நோய்கள், நாள்பட்ட நிலைமைகள் போன்றவற்றையும் உள்ளடக்கிய பரந்த தேர்வை வழங்க காப்பீட்டைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதற்கேற்ற தேர்வுகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அறிவுறுத்துகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2155450 )
AD/SM/RJ
(Release ID: 2155658)