வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செப்டோ நோவா புதுமை கண்டுபிடிப்புகள் சவால் மூலம் உற்பத்தி தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கு தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, செப்டோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 12 AUG 2025 11:48AM by PIB Chennai

ர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, அதன் 'செப்டோ நோவா' புதுமை கண்டுபிடிப்புகள் சவால் மூலம் உற்பத்தித் துறையில் தொடக்க கட்ட புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் அளவிடுவதற்கும் செப்டோ தனியார் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒத்துழைப்பு, ஆறு மாத திட்டத்தின் மூலம் புத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிபுணர் தலைமையிலான பயிலரங்குகள் மற்றும் புத்தொழில்  இந்தியா உதவி மூலம் வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டாண்மை ஆதரவை அளிக்கும். மகளிர் தலைமையிலான, 2 மற்றும் 3-ம் நிலை புத்தொழில் நிறுவனங்களை மையமாகக் கொண்டு கூடுதலாக, செப்டோ நிறுவனம் 100க்கும் மேற்பட்ட இந்திய புத்தொழில் நிறுவனங்களை அதன் விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைத்து, தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், சந்தை அணுகலைப் பெறவும், தங்கள் இருப்பை விரிவுபடுத்தவும் ஒரு தளத்தை வழங்கும்.

இந்த நிகழ்வில் பேசிய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், யூனிகார்ன்களின் ஆதரவு புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்று கூறினார். வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், புத்தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு சந்தை அணுகல் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155374

***

(Release ID: 2155374)

AD/SM/IR/SG/RJ


(Release ID: 2155467)