சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பசுமை வேலைவாய்ப்பு உருவாக்கம்
Posted On:
11 AUG 2025 5:40PM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, எரிசக்தி திறன், நீடித்த விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் வகையிலும் நவீன நகர்ப்புற இயக்கம் மற்றும் தேசிய சூரிய சக்தி இயக்கம் போன்ற திட்டங்கள் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புதிய பொருட்கள் மற்றும் சேவைகள் அடிப்படையிலான பழுதுநீக்கம், புத்தாக்கம், மறுசுழற்சி போன்றவைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கழிவுகளை சேகரித்தல், பழுது பார்த்தல், மறு சுழற்சி போன்ற துறைகளில் குறைந்த திறனுடைய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். மறுசுழற்சி துறையில் ஒவ்வொரு பத்தாயிரம் டன் கழிவுப் பொருட்களுக்கு ஏறத்தாழ 115 வேலைவாய்ப்புகள் உருவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுழற்சி அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் சந்தை அடிப்படையிலான ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்த அறிவிக்கையின் படி பிளாஸ்டிக் கழிவுகள், மின்கலன் கழிவுகள், டயர், பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பயன்பாடற்ற வாகனங்கள் கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுக் கழிவுகள் உலோகக் கழிவுகள் ஆகியவற்றுக்கு விரிவான உற்பத்தியாளார் பொறுப்புணர்வு குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்று பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155127
***
AD/SV/RJ/SG/DL
(Release ID: 2155222)