பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2025 ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் 1,47,902 பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது
Posted On:
11 AUG 2025 3:27PM by PIB Chennai
2025 ஜூலை மாதத்திற்கான மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மாதாந்திர அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பொதுமக்கள் அளித்த குறைகளின் வகைகள் மற்றும் அதற்கு தீர்வு காணப்பட்டது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
2025 ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் 1,47,902 பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் மக்களின் குறைகளுக்கு தீர்வுகாணும் சராசரி நாட்கள் 15 ஆகும். தொடர்ந்து 37-வது மாதமாக மத்திய செயலகங்களில் குறைகளுக்கு தீர்வு காணப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது.
2025 ஜூலை மாதத்தில் மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு தளத்தில் 1,51,509 பொதுமக்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 1,47,902 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 67,118 பொதுமக்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்கள் தற்போது நிலுவையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155022
***
AD/IR/AG/DL
(Release ID: 2155217)