பாதுகாப்பு அமைச்சகம்
முன்னாள் படைவீரர்களின் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு உதவுகிறது – மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்
Posted On:
11 AUG 2025 4:43PM by PIB Chennai
நாட்டில் முன்னாள் படைவீரர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விதிமுறைகளின்படி மத்திய அரசு கூடுதல் ஓய்வூதிய நிதியை அளித்து வருகிறது. அத்துடன் ஒரே பதவியில் உள்ள தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற வீரர்களின் ஓய்வூதிய விகிதத்தில் உள்ள இடைவெளியை களையும் வகையில் ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், தனியார் துறை, மத்திய துணை ராணுவப்படை ஆகியவற்றில் முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் ஆகியவற்றை அரசு நடத்தி வருகிறது.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முன்னாள் படைவீரர்களுக்காக குருப்-சி பணியில் 14.5 சதவீத இடஒதுக்கீடும், குருப்-டி 24.5 சதவீத இடஒதுக்கீடும் உள்ளன.
நாட்டில் 30.06.2024 நிலவரப்படி முன்னாள் படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 28,31,109 ஆகும். தமிழ்நாட்டில் 1,23,349 முன்னாள் படைவீரர்களும், புதுச்சேரியில் 2,477 முன்னாள் படைவீரர்களும் உள்ளனர்.
இத்தகவலை பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று (11 ஆகஸ்ட் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2155070)
AD/IR/AG/SG/DL
(Release ID: 2155213)