பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நினைவு சொற்பொழிவு - பெங்களூரு ஹெச்ஏஎல் சார்பில் நடைபெற்றது

Posted On: 09 AUG 2025 6:36PM by PIB Chennai

ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நினைவு சொற்பொழிவின் 16-வது பதிப்பு இன்று (2025 ஆகஸ்ட் 09) அன்று பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் மேலாண்மை அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரேவின் நீடித்த மரபு மற்றும் இந்திய விமானத்துறை மீதான அவரது நீடித்த தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், கர்நாடகா கிளையின் விமானப்படை சங்கமும், பெங்களூரு ஹெச்ஏஎல் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இந்த கூட்டத்தில் இந்திய விமானப்படை, ஹெச்ஏஎல், டிஆர்டிஓ மற்றும் அதனுடன் தொடர்புடைய விமான, விண்வெளித் தொழில் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடக விமானப்படை சங்கத்தின் தலைவர் ஏர் மார்ஷல் எச்.பி. ராஜாராம் (ஓய்வு) பார்வையாளர்களை வரவேற்று நினைவு சொற்பொழிவு குறித்து பேசினார். விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் .பி. சிங், சிறப்புரையாற்றினார். இதில், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். நவீன ராணுவ மோதல்களில் விமானப்படையின் முதன்மைத்தன்மையையும், தேசிய பாதுகாப்பில் அதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் உள்நாட்டுமயமாக்கல், ஆராய்ச்சி, மேம்பாடு, கூட்டு முறையில் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

விமானப்படை சங்க கர்நாடக கிளையின் துணைத் தலைவர் ஏர் கமாண்டர் .கே. பத்ராவின் (ஓய்வு) நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது.

*****

(Release ID: 2154548)

AD/SM/PLM/SG

 

 


(Release ID: 2154735)
Read this release in: English , Urdu , Hindi , Marathi