பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மின்னணு சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கு மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை ஒத்துழைப்பு
Posted On:
09 AUG 2025 12:16PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வுத் துறை மூலம் சேவை வழங்கல் உரிமை ஆணையர்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. தேசிய மின்னணு சேவை வழங்கல் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், பொது சேவை வழங்கல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சேவை உரிமை ஆணையங்களுடன்( ஆர்டிஎஸ்) ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வுத்துறை செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் ஆகஸ்ட் 08 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சண்டிகர், பஞ்சாப், உத்தராகண்ட், மேகாலயா, அசாம், மேற்கு வங்காளம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த எட்டு சேவை உரிமை ஆணையர்கள் கலந்துகொண்டனர். தேசிய நல்லாட்சி மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டேவும் இதில் கலந்து கொண்டார்.
ஆர்டிஎஸ் ஆணையங்கள் நிறுவப்பட்ட மாநிலங்களில் மின் சேவைகளின் வளர்ச்சியை செயலாளர் திரு ஶ்ரீனிவாஸ் விளக்கினார். இது மின் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான வலுவான ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைத்தது. மாநில குறை தீர்க்கும் அதிகாரிகளின் பயனுள்ள மேற்பார்வைக்காக மாநில சேவை வழங்கலின் நிகழ்நேர தரவு பகிர்வுக்கான சிபிகிராம்ஸ் தளத்தை ஆணையங்களின் வலைத்தளங்களுடன் இணைப்பது நிறைவடைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். வணிகம் செய்வதற்கான சேவை உரிமைச் சட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை நோக்கங்களுடன் இணக்கமாக, நிலம், தொழிலாளர், நிதி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய நான்கு முக்கிய துறைகளில் மின்னணு சேவைகளை மேம்படுத்துவதற்காக ஆர்டிஎஸ் ஆணையர்கள் துறையுடன் ஒத்துழைப்பார்கள்.
தேசிய மின்னணு சேவை வழங்கல் மதிப்பீட்டு திட்டத்தின் கட்டமைப்பின் கீழ், தற்போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 22,000 க்கும் மேற்பட்ட மின்ணு-சேவைகளை வழங்குகின்றன. பொது சேவை வழங்கல் மற்றும் குறைகளைத் தீர்ப்பதில் ஆர்டிஎஸ் ஆணையங்களின் தாக்கத்தை ஆராய்வதற்கான ஒரு ஆய்வு தேசிய நல்லாட்சி மையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
*****
(Release ID: 2154580)
AD/SM/PKV/SG
(Release ID: 2154602)