சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் நாடு முழுவதும் 305 நடமாடும் உணவு சோதனை ஆய்வகங்களை நிறுவுகிறது

Posted On: 08 AUG 2025 4:48PM by PIB Chennai

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் மூலம் கடுமையான ஆய்வுகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அமலாக்கம் மூலம் இந்திய அரசு சாலையோர உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை வகுக்க இந்த ஆணையம் கடமைப்பட்டுள்ளது. மேலும் மனித நுகர்வுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதியை ஒழுங்குபடுத்துகிறது.

 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் பிரிவு 31 (1) மற்றும் 31 (2) இன் படி, எந்தவொரு நபரும் உரிமம் / பதிவின்றி, எந்தவொரு உணவு வணிகத்தையும் தொடங்கவோ அல்லது நடத்தவோ கூடாது. எனவே, அனைத்து உணவு வணிக நிறுவனங்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உரிமம் மற்றும் பதிவு) விதிமுறைகள், 2011 இல் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் விதிகளுக்கு இணங்க வேண்டும். ஒவ்வொரு உணவு வணிக நிறுவனமும் உணவு வணிகத்தின் வகை மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டு மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குமுறையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட அட்டவணை 4ன் சுகாதார மற்றும் சுகாதார அத்தியாவசியங்கள் மற்றும் பிற தேவைகளைப் பின்பற்ற வேண்டும். உணவுப் பாதுகாப்பு ஆய்வு நடத்தும் அதிகாரி அல்லது இந்த நோக்கத்திற்காக குறிப்பாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரி அல்லது நிறுவனத்தால்  ஒழுங்குமுறையின் துணை விதி 2.1.1. (6)ல் குறிப்பிட்டுள்ளபடி சிறு உணவு வணிக நிறுவனங்களில் வருடத்திற்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுவதை கட்டாயப்படுத்துகிறது.

 

மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம், மாநில/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் மூலம், உணவுப் பொருட்களின் வழக்கமான கண்காணிப்பு மற்றும் ஆய்வை மேற்கொள்கிறது. முன்னறிவிப்பின்றி மாதிரி சேகரிப்பை மேற்கொண்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006, ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்கிறது. உணவு மாதிரிகள் விதிகளுக்கு இணங்காததாகக் கண்டறியப்பட்டால், சட்டத்தின் விதிமுறைகள் அடிப்படையில், தவறு செய்யும் உணவு வணிக நிறுவனங்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட மாநில வாரியான ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2022-23ம் நிதியாண்டில் 5409 ஆய்வுகளும், 2023-24ம் நிதியாண்டில் 3742 ஆய்வுகளும், 2024-25ம்  நிதியாண்டில் 3053 ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

-----

AD/SM/DL


(Release ID: 2154495)
Read this release in: English , Urdu , Hindi