சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நாட்டில் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு 1207 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
Posted On:
08 AUG 2025 2:36PM by PIB Chennai
பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட மத்திய அரசின் நிதியுதவியுடன் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பற்கான திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு விரைவு நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு குறித்த காலக்கெடுவுக்குள் தீர்வு காணும் வகையில் விரைந்து செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் 790 நீதிமன்றங்கள் அமைக்க ஏதுவாக வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1952.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.1,207.24 கோடி நிர்பயா நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
2025-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 392 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 225 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 3,34,213 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
போக்சோ சட்டங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளுக்குத் தீர்வு காண்பதில் சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்று பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன.
போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள், வழக்கமான நீதிமன்றங்களில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 3.26 விகிதமாக இருக்கும் நிலையில் இந்த சிறப்பு விரைவு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை விகிதம் சராசரியாக 9.51 உள்ளது.
தமிழ்நாட்டில் தலா 14 போக்சோ மற்றும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இதுவரை (30.06.2025) மொத்தம் 10,199 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154077
-----
VL/SV/KPG/SG
(Release ID: 2154283)