பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணிகளிலிருந்து ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடை தொடர்பான விதிமுறைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2025 3:26PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மத்திய சிவில் சேவைகளுக்கான (தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிக்கொடை) விதிகளை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ளது. இந்த விதி முறைகள் தன்னாட்சி அமைப்புகளின் பணியாளர்களுக்கு பொருந்தாது. இருப்பினும், 2020 பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணை (7/5/2012-P&PW(F)/B) வாயிலாக, ஓய்வூதியம் / இறப்புக்குப் பின் வழங்கப்படும் பணிக்கொடை போன்ற பலன்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு போன்ற  தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போன்று ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளால் வழங்கப்படும் பணிக்கொடை, வட்டி அல்லது சேவை காலத்தை கணக்கிடுதல் போன்றவை குறிப்பிட்ட தன்னாட்சி அமைப்பு பின்பற்றும் குறிப்பிட்ட பணிக்கொடை விதிகளைப் பொறுத்தது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2153540)

AD/SM/SV/SG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2153762) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी