பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால அவகாசம் 21 நாட்களாக குறைப்பு
Posted On:
06 AUG 2025 3:01PM by PIB Chennai
01.11.2022 முதல் 26.05.2025 வரை மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகளில் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட, தீர்வு காணப்பட்ட, நிலுவையில் உள்ள புகார்கள் குறித்த விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 75790 ஆகும். தற்போது பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 4262459 ஆகும். இதுவரை தீர்வு காணப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 4273289, 26.05.2025 நிலவரப்படி நிலுவையில் உள்ள புகார்களின் எண்ணிக்கை 64960 ஆகும். புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான சராசரி கால அளவு 16 நாட்களாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அமைச்சகங்களும் துறைகளும் ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான குறைகளுக்குத் தீர்வு கண்டுள்ளன. பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான கால அளவு 30 நாட்களில் இருந்து 21 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருடாந்திர தூய்மை சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 2024 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் 3.0 வில் 5.55 லட்சம் குறைகளுக்கும் மேல்முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
இந்தத் தகவலை மக்களவையில் இன்று அறிவியல்-தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், தொழிலாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு & ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID : 2152955)
AD/TS/SV/DL
(Release ID: 2153267)