பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை
Posted On:
06 AUG 2025 3:03PM by PIB Chennai
செயலக பணிகளுக்கான நடைமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை உரிய நேரத்தில் அளிப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட மத்திய அரசின் தலைமைச் செயலக அலுவலக நடைமுறைகள் குறித்த கையேட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டை https://darpg.gov.in/relatedlinks/csmop என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாக அலுவலர் இடையேயான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
-----
(Release ID: 2152956)
AD/SV/KPG/KR
(Release ID: 2153155)