நிதி அமைச்சகம்
நபார்டும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு முயற்சிகள் மூலம் கிராமப்புற நிதி எழுத்தறிவை ஊக்குவிக்கின்றன; நாடு முழுவதும் 2,421 நிதி எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Posted On:
05 AUG 2025 5:27PM by PIB Chennai
கிராமப்புற மக்களின் நிதி கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்க, தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டுள்ளன, இதில் நுண்நிதி கடன் வாங்குபவர்களும் அடங்குவர்.
இது பின்வரும் முயற்சிகள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது:
குறைந்த விழிப்புணர்வு உள்ள பகுதிகளில் கிராமப்புற வங்கி கிளைகள் மற்றும் நிதி எழுத்தறிவு மையங்கள் (FLCs) மூலம் நிதி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவு முகாம்களை நடத்துவதற்கு நபார்டு நிதி உதவி அளித்து வருகிறது. இவை, பல்வேறு வங்கித் திட்டங்கள், இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், டிஜிட்டல் வங்கி, மொபைல் வங்கி, சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை உள்ளடக்குகின்றன.
நிதி எழுத்தறிவுக்கு சமூகம் தலைமையிலான புதுமையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், நிதி எழுத்தறிவு மையத் (CFL) திட்டம் 2017 முதல் ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 31, 2025 நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 2,421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
வங்கிகள் மற்றும் மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் கிராம அளவிலான திட்டங்களுக்கும் (VLPs) நபார்டு நிதியுதவி அளிக்கிறது, இது வங்கியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் (SHGs) இடையே சிறந்த இடைமுகத்தை ஏற்படுத்துகிறது.
நுண்நிதிக் கடனின் வரையறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்-நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான பல்வேறு அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட சுழற்சியில் கடன் தொகைக்கான வரம்புகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் கடன்களுக்கான குறைந்தபட்ச கால அளவு ஆகியவை அடங்கும். தற்போது, ₹3,00,000 வரை ஆண்டு வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் அனைத்து பிணையில்லா கடன்களும் நுண்நிதிக் கடன்களாகக் கருதப்படுகின்றன.
இந்தத் தகவலை, மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி, இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152632
----
(Release ID: 2152632)
AD/RB/DL
(Release ID: 2152801)