மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்க என்ஐஇஎல்ஐடி-யும் டிஜிஆர்-ம் இணைந்து செயல்படுகின்றன
Posted On:
02 AUG 2025 5:13PM by PIB Chennai
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான என்ஐஇஎல்ஐடி-யும்ஆகியவை மறுபணியமர்த்தல் இயக்குநரகமான டிஜிஆர்-ம் இணைந்து ஆகஸ்ட் 2, 2025 அன்று தில்லியில் வேலைவாய்ப்பு முகாம் 2025-ஐ வெற்றிகரமாக ஏற்பாடு செய்தன. 14 நிறுவனங்கள் அந்தந்த நிறுவனங்களில் 250-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளுக்கு நபர்களை தேர்வு செய்தன.
இந்த நிகழ்வு தகவல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப களங்களில் பயிற்சி பெற்ற சேவையில் முன்னாள் படைவீரர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை வழங்கியது.
என்ஐஇஎல்ஐடி-யின் திட்டம் மற்றும் திறன் இயக்குநரும் தலைமை தேர்வு கட்டுப்பாட்டாளருமான டாக்டர் அலோக் திரிபாதி, விருந்தினர்களையும் பங்கேற்பாளர்களையும் வரவேற்று, பயிற்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் என்ஐஇஎல்ஐடி-யின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட தில்லி என்ஐஇஎல்ஐடி -யின் நிர்வாக இயக்குநர் திரு சுபான்ஷு திவாரி, ஊக்கமளிக்கும் உரையுடன் முகாமைத் தொடங்கி வைத்தார். தமது உரையில், தேசிய முன்னுரிமையாக முன்னாள் படை வீரர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை வழங்க வேண்டியதை அவர் வலியுறுத்தினார். சீருடையில் இருந்து புதிய தொழில்முறை அடையாளத்திற்கு மாறுவது ஒரு குறிப்பிடத்தக்க சவாலான கட்டம் என்பதை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2151759)
AD/PLM/RJ
(Release ID: 2151829)