பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் வருகை

Posted On: 01 AUG 2025 3:16PM by PIB Chennai

தென்கிழக்கு ஆசியாவில் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சுஷீல் மேனனின் தலைமையில், கிழக்கு கடற்படையின் இந்திய கடற்படை கப்பல்களான ஐஎன்எஸ் டெல்லி, சக்தி மற்றும் கில்டன் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவை வந்தடைந்தன.

இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் கடல்சார் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்களால் இந்திய கப்பல்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணம் இந்திய-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

மணிலாவுக்கு வருகை தந்ததும், உள்ளூர் ஊடக பிரதிநிதிகளுடன் ரியர் அட்மிரல்  சுஷீல் மேனன் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நிலைத்தன்மை மற்றும் கடல்சார் பாதுகாப்பைப் பேணுவதில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். நட்பு அடிப்படையில் கடல்சார் படைகளிடையே புரிதல், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இத்தகைய செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டு நடவடிக்கைகள் நிகழ்வின் உத்திசார் முக்கியத்துவத்தையும், பிலிப்பைன்ஸ் கடற்படையுடனான உயர் மட்ட ஈடுபாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இது பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் திறனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

துறைமுக கூட்டு நடவடிக்கையின் போது, இந்திய கடற்படைக்கும் பிலிப்பைன்ஸ் கடற்படைக்கும் இடையே பல துறைமுக செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் திட்டமிடல் தொடர்பான விவாதங்கள், உபகரணங்கள் மற்றும் நிபுணர் பரிமாற்றங்கள், பரஸ்பர கற்றல் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிற தொழில்முறை மற்றும் சமூக ஈடுபாடுகள் ஆகியவை அடங்கும்.

இந்த பயணம் இரு கடற்படைகளுக்கும் இடையே இருதரப்பு கடல்சார் பயிற்சியையும் உள்ளடக்கியதாக இருக்கும், இது தயார்நிலையை மேம்படுத்துவதற்கும், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குவதற்கும், கடல்சார் களத்தில் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் கூட்டு நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறைகளில் கவனம் செலுத்துகிறது.

***

(Release ID: 2151260)

AD/SM/KR

 

 


(Release ID: 2151420)
Read this release in: English , Urdu , Hindi , Bengali