ஜவுளித்துறை அமைச்சகம்
2025-ம் ஆண்டில் ஜவுளித் துறையின் வளர்ச்சி
Posted On:
01 AUG 2025 2:20PM by PIB Chennai
ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் (கைவினைப்பொருட்கள் உட்பட), ஒட்டுமொத்த ஏற்றுமதி முந்தைய ஆண்டில் 35,874 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் 37,754 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 5% வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஜவுளித் துறையில் முதலீடுகளை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, மேற்கு வங்க மாநிலம் உட்பட நாடு முழுவதும் உள்ள ஜவுளி மையங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன உள்கட்டமைப்புடன் கூடிய ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்காக அரசாங்கம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தியது. ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்காக மட்டுமே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம் தற்போது ஜவுளி கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு ஜவுளி பூங்காக்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் இதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ஜவுளி அமைச்சகம் மொத்தம் ரூ.56.85 கோடியை விடுவித்துள்ளது.
கூடுதலாக, தமிழ்நாடு (விருதுநகர்), தெலுங்கானா (வாரங்கல்), குஜராத் (நவசாரி), கர்நாடகா (கலபுரகி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களில் 2027-28 வரை ஏழு ஆண்டுகளுக்கு ரூ. 4,445 கோடி செலவில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்காக்களை அமைப்பதை அரசாங்கம் இறுதி செய்துள்ளது.
இந்தத் தகவலை ஜவுளித்துறை இணை அமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2151226)
AD/SM/KR
(Release ID: 2151388)